உள்ளூர் செய்திகள்

வாழப்பாடி பெரியசாமி நகரில் நவராத்திரி பூஜை நிறைவு விழா

Published On 2022-10-05 10:34 GMT   |   Update On 2022-10-05 10:34 GMT
  • விநாயகர் கோவில் வளாகத்தில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
  • நவராத்திரி பூஜை நிறைவு விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.

வாழப்பாடி:

வாழப்பாடி பெரியசாமி நகரில் விநாயகர் கோவில் வளாகத்தில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

நடப்பாண்டும் கொலு வைத்தும், 9 நாட்களாக ஐம்பொன் அம்மனுக்கு, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி தேவியரின் அலங்காரம் செய்தும் தினந்தோறும் சிறப்பு பூஜை நடத்தி பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

நவராத்திரி பூஜை நிறைவு விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. கலைவாணி சரஸ்வதி அலங்காரத்தில் ஐம்பொன் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இப்பகுதியைச் சேர்ந்த ஜீவாமணி சிவபக்தி சிறுவர்கள் மேள வாத்தியங்கள் வாசித்து பக்தர்களை பரவசப்படுத்தினர். சிவபக்திக்குழு பெண்கள் சிவபுராணம், அம்மன் துதிபாடி வழிபாடு நடத்தினர்.

இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.

Tags:    

Similar News