உள்ளூர் செய்திகள்

திருச்சியில், விவசாயிகளுக்கு பயிர்களில் மதிப்பு கூட்டுதல் குறித்த பயிற்சி

Published On 2022-06-30 10:45 GMT   |   Update On 2022-06-30 10:45 GMT
  • விவசாயப் பொருள்களை நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பின்பு அதனை மதிப்புக்கூட்டி விற்பனை செய்துதங்கள்வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளுமாறு விவசாயிகளுக்கு ஆலோசனைவழங்கினார்
  • விவசாயிகளுக்குதானியப் பயிர்களில் உள்ள நன்மைகளும் அதன் நம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் முறைகளை பற்றியும் கூறப்பட்டது.

திருச்சி:

தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை அட்மா திட்டத்தின் கீழ் தொட்டியத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் குழு வளாகத்தில் தானிய வகை பயிர்களில் அறுவடை பின் செய்நேர்த்தி மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இப்பயிற்சிக்கு தொட்டியம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் தலைமை ஏற்றார்.அப்போது அவர் விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளை பயிர் செய்வதில் இருந்து அறுவடை வரை நிறுத்திக் கொள்ளாமல் விவசாயப் பொருள்களை நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பின்பு அதனை மதிப்புக்கூட்டி விற்பனை செய்துதங்கள்வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளுமாறு விவசாயிகளுக்கு ஆலோசனைவழங்கினார். மேலும் உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க அரசு மானியங்கள் வழங்குவதாகவும் கூறினார்.

தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் குழும இயக்குனர் சுப்பிரமணியன் சுந்தர் மற்றும் தீனதயாளன் ஆகியோர் விவசாயிகளுக்குதானியப் பயிர்களில் உள்ள நன்மைகளும் அதன் நம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் முறைகளை பற்றியும், தானிய வகை பயிர்களை மதிப்பு கூட்டுதல் போன்ற பயிற்சி தஞ்சாவூரில் நடைபெறுவதாக கூறினார்.

சூரிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி விவசாய பொருட்களை பதப்படுத்துதல் மற்றும் அதனை மதிப்புக்கூட்டி சந்தைக்கு எடுத்துச் செல்லுதல் முதலிய பயிற்சியை விவசாயிகளுக்கு அளித்தனர்.மதிப்பு கூட்டப்பட்ட விவசாய பொருள்களை வெளிநாடுகளுக்கு சந்தைபடுத்துதல் முதலியன ஆலோசனையும் வழங்கினார்.

முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் கிருத்திகா நன்றி கூறினர். முகாம் ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் திவ்யபாரதி செய்தார்.

Tags:    

Similar News