உள்ளூர் செய்திகள்

ரூ.18 லட்சம் செக் மோசடி வழக்கில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகருக்கு ஓராண்டு சிறை - ஸ்ரீரங்கம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

Published On 2022-08-18 10:00 GMT   |   Update On 2022-08-18 10:00 GMT
  • திருச்சி கண்டோன்மெண்ட் ரெனால்ட்ஸ் ரோடு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் முனனாள் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் குகன் என்பவர் கடந்த 2019-ல் குண்டூரில் உள்ள தனது நில பத்திரத்தை அடமானமாக வைத்து ரூ.15 லட்சம் கடன் பெற்றார்.
  • அந்த காசோலை அவரது வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்பியது.

திருச்சி :

திருச்சி சர்க்கார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் எம்.விக்னேஸ்வரன். ஹார்டுவேர் தொழில் செய்து வருகிறார். இவரிடம் திருச்சி கண்டோன்மெண்ட் ரெனால்ட்ஸ் ரோடு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் முனனாள் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் குகன் என்பவர் கடந்த 2019-ல் குண்டூரில் உள்ள தனது நில பத்திரத்தை அடமானமாக வைத்து ரூ.15 லட்சம் கடன் பெற்றார்.

பின்னர் 2020-ல் வட்டியுடன் சேர்த்து ரூ.18 லட்சத்துக்கு காசோலையாக திருப்பி கொடுத்துள்ளார். ஆனால் அந்த காசோலை அவரது வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்பியது. இதைத்தொடர்ந்து விக்னேஸ்வரன் ஸ்ரீரங்கம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் குகன் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் மாஜிஸ்திரேட் சத்ய குமார் செக் மோசடி செய்த குகனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், காசோலைக்கான தொகையினை 30 நாட்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளார்.

இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக வக்கீல் பிச்சை மணி ஆஜராகி வாதாடினார்.  

Tags:    

Similar News