உள்ளூர் செய்திகள்

திருச்சி நாச்சிக்குறிச்சி கைராசி நகரில் ரித்தி கிளினிக் திறப்பு விழா

Published On 2022-08-18 10:02 GMT   |   Update On 2022-08-18 10:02 GMT
  • நாச்சிக்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கைராசி நகரில் ஸ்ரீ ரித்தி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது.
  • ரித்தி கிளினிக்கில் மகப்பேறு பொது மருத்துவம் குழந்தையின்மை சிறப்பு சிகிச்சைகள், சுகப்பிரசவம், கர்ப்பப்பை கட்டி, வெள்ளைபடுதல், ஸ்கேன் வசதி, மாதவிடாய் கோளாறுகளுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

திருச்சி,

திருச்சி வயலூர் மெயின் ரோடு நாச்சிக்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கைராசி நகரில் ஸ்ரீ ரித்தி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. திருச்சி இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் சங்க செயலாளரும், மகப்பேறு சிறப்பு சிகிச்சை நிபுணருமான டாக்டர் தமிழ்செல்வி மற்றும் காவேரி மருத்துவமனை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சொக்கலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

இதில் மருத்துவமனை டாக்டர் சிந்துஜா, டாக்டர் கலைவாணன், காவேரி மருத்துவமனை பிளாஸ்டிக் சர்ஜன் டாக்டர் ஸ்கந்தா, கே.எம்.சி.டாக்டர் அரவிந்த், சிவம் கிளினிக் டாக்டர் சதாசிவம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ரித்தி கிளினிக்கின் டாக்டர் சிந்துஜா, மகப்பேறு, குழந்தையின்மை மற்றும் மகளிர் நல சிறப்பு அறுவை சிகிச்சை மருத்துவராக உள்ளார். ரித்தி கிளினிக்கில் மகப்பேறு பொது மருத்துவம் குழந்தையின்மை சிறப்பு சிகிச்சைகள், சுகப்பிரசவம், கர்ப்பப்பை கட்டி, வெள்ளைபடுதல், ஸ்கேன் வசதி, மாதவிடாய் கோளாறுகளுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவிற்கு 99448 01540 எண்ணிற்கு தொடர்புகொள்ளவும் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News