உள்ளூர் செய்திகள்

திருச்சியில் 3 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது

Update: 2022-08-15 09:43 GMT
  • திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் 3 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்
  • கைது செய்யப்பட்டவர்கள் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டித்துரை (வயது 24), பாலக்கரை பகுதியை சேர்ந்த கார்த்திக் (27) என்பது தெரியவந்தது

திருச்சி:

தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் குட்கா விற்பனையை தடுக்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து திருச்சி மாநகர போலீசார் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

குறிப்பாக கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் கஞ்சா பழக்கம் அதிகரித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் இரண்டு வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் வரைந்து சென்று அந்த வாலிபர்களை மடக்கி விசாரித்தனர்.

பின்னர் அவர்கள் வசம் இருந்து 3 கிலோ கஞ்சா செய்யப்பட்டது. பின்னர் போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டித்துரை (வயது 24), பாலக்கரை பகுதியை சேர்ந்த கார்த்திக் (27) என்பது தெரியவந்தது. அவர்கள் கஞ்சா கடத்தி வந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags:    

Similar News