உள்ளூர் செய்திகள்

சாலையில் சென்ற கார் மீது திடீரென விழுந்த மரம்... வங்கி மேலாளர் உயிரிழப்பு

Update: 2022-06-24 14:28 GMT
  • விபத்து தொடர்பாக கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
  • சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழைநீர் வடிகால் பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை போரூரில் வசித்து வந்தவர் வாணி கபிலன். ஐஓபி வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் இன்று மாலை தனது தங்கையுடன் காரில் சென்றுகொண்டிருந்தார். கே.கே.நகர் லட்சுமணசாமி சாலையில் சென்றபோது சாலையோரம் உள்ள மரம் திடீரென காரின் மீது விழுந்தது.

இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. காருக்குள் இருந்த வாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தங்கை எழிலரசி மற்றும் கார் டிரைவர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறுகிறது. இதற்காக சாலையோரம் பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இந்த பள்ளம் அருகே உள்ள மரம் சாய்ந்துள்ளது.

Tags:    

Similar News