உள்ளூர் செய்திகள்
கிராமசபை கூட்டம் நடைபெற்ற காட்சி

கண்ணமநாயக்கனூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

Update: 2022-10-05 11:21 GMT
  • கண்ணமநாயக்கனூர் ஊராட்சியில் உள்ள மலையாண்டி அரசுபள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
  • ஊராட்சி செயலாளர் பாலு உட்பட வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

உடுமலை :

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கண்ணமநாயக்கனூர் ஊராட்சியில் உள்ள மலையாண்டி கவுண்டனூர் அரசு பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பம்மாள் தலைமையில் கிராம சபை கூட்டம் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல் படி நடைபெற்றது. ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில் ஊராட்சிக்குட்பட்ட கருப்பட்டி பாளையம், மருள்பட்டி, மலையாண்டி கவுண்டனூர், கண்ணமநாயக்கனூர், பள்ளிவலசு உட்பட அனைத்து ஊராட்சிகளிலும் அடிப்படை தேவைகள் கண்டறிந்து நிறைவேற்றுதல் ,நிறைவேற்றபடாத பணிகளை உடனே நிறைவேற்றுதல் உட்பட 36 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.ஊராட்சி செயலாளர் பாலு உட்பட வார்டு உறுப்பினர்கள்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News