உள்ளூர் செய்திகள்

இணைந்த தம்பதியினரை படத்தில் காணலாம்.

பல்லடம் மக்கள் நீதிமன்றத்தில் பிரிந்து வாழ்ந்த தம்பதியினர் மீண்டும் இணைந்தனர்

Published On 2022-08-14 10:51 GMT   |   Update On 2022-08-14 10:51 GMT
  • 376 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில் 285 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
  • தீர்வு தொகையாக ரூ.87,93,151 வழங்கப்பட்டது.

பல்லடம் :

பல்லடம் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் பல்லடத்தில் மக்கள் நீதிமன்றம் பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது

இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, காசோலை வழக்கு, சொத்து வழக்கு, குடும்ப வழக்கு, உள்ளிட்ட 376 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில் 285 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது தீர்வு தொகையாக ரூ.87,93,151 வழங்கப்பட்டது. இதில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வந்த மெரின் ரம்சானா- நித்திய பிரகாஷ் தம்பதியினரிடம் குடும்ப வன்முறை குறித்த வழக்கில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.இதில் இருவரும் சேர்ந்து வாழ சம்மதித்ததையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டு நீதிபதிகள் முன்னிலையில் கருத்து வேறுபாடால் பிரிந்த இளம் தம்பதிகள் மீண்டும் குடும்ப வாழ்வில் இணைந்தனர்.

Tags:    

Similar News