உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

கருவலூர் செங்காளிபாளையம் பொய்யேரி கருப்பராயசாமி கோவில் பொங்கல் திருவிழா நாளை நடக்கிறது

Published On 2022-08-15 09:57 GMT   |   Update On 2022-08-15 09:57 GMT
  • பொய்யேரி கருப்பராயசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
  • கோவில் ஆடித்திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

திருப்பூர் :

அவினாசியை அடுத்த கருவலூர் செங்காளிபாளையத்தில் பொய்யேரி கருப்பராயசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பொய்யேரி கருப்பராயசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் விநாயகர், கூடமுடையார், மீனாட்சியம்மன், காரணாம்பிகையம்மன், இருளப்பசாமி, கன்னிமார், தன்னாசியப்பர் ஆகிய தெய்வங்களும் உள்ளன. இந்த கோவில் ஆடித்திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

அதன்படி நாளை காலை 6 மணிக்கு சாமி பொங்கல் வைத்தலும், 9.30 மணிக்கு சாமிகளுக்கு அபிஷேக பூஜை, தீபாராதனை நடக்கிறது. மதியம் 12 மணிக்கு பொய்யேரி கருப்பராயசாமி, இருளப்பசாமி, கன்னிமார்சாமி, தன்னாசியப்பசாமிகளுக்கு அபிஷேக, அலங்கார, மகா தீபாராதனை நடக்கிறது.

Tags:    

Similar News