உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

அதிகரிக்கும் கொரோனா: சுயபாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்- சுகாதாரத்துறை அதிகாரி அறிவுறுத்தல்

Published On 2022-06-26 08:45 GMT   |   Update On 2022-06-26 08:45 GMT
  • இதுவரை யாருக்கும் பிஏ 4, பிஏ 5 வகை கொரோனா தொற்று உறுதியாகவில்லை.
  • சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா சற்று வேகமெடுத்து வருகிறது. கடந்த ஒரே வாரத்தில், 21 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.இம்மாதத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 9 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

தினசரி பாதிப்பு உயர்ந்து வருவதால், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர். இது ஒருபுறம் இருக்க தமிழகத்தில் பிஏ 4, பிஏ 5 வகை கொரோனா வேகமாக பரவி வருவதாக அமைச்சர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் பிஏ 4, பிஏ 5 வகை கொரோனா தொற்று உறுதியாகவில்லை. தொற்று பரிசோதனையில் யாருக்காவது தெரிய வந்தால், ரத்த மாதிரி சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்படுவர். தொற்று பாதித்த 28 பேரில் தற்போது 12 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.மக்கள் பயப்பட வேண்டியதில்லை.

அதே நேரம்அலட்சியமாக இருப்பது பெரும் தவறு. தொற்று வந்த பின் வருத்தமடைவதை விட முன்னெச்சரிக்கை இருந்து கொள்வது நல்லது.வெளியிடங்களுக்கு செல்லும் போது தவறாமல் முககவசம் அணிய வேண்டும். சானிடைசர் பயன்படுத்த வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொருவரும் சுயபாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News