உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்ட பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

Update: 2022-09-27 08:11 GMT
  • 6 மாத காலம் உதவி தொகையுடன் பயிற்சியுடன் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.
  • பூங்கா பராமரிப்புக்கு பி.எஸ்சி., தோட்டக்கலை முடித்தோரும் விண்ணப்பிக்கலாம்.

திருப்பூர் :

தமிழக நகர்ப்புற பயிற்சி வேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ் 6 மாத காலம் உதவி தொகையுடன் பயிற்சியுடன் (இன்டெர்ன்ஷிப்) கூடிய வேலை வாய்ப்புகள் பின் வரும் பிரிவுகளில் வழங்கப்படுகிறது. சிவில், எலக்ட்ரிக்கல், ஆர்கிடெக், என்விரான்மென்ட், அர்பன் பிளானிங், மெக்கானிக்கல், கெமிக்கல் ஆகிய பிரிவுகளில் சைட் என்ஜினீயர் பணி. இதற்கு உரிய பிரிவுகளில் பி.இ., அல்லது பி.டெக்., படித்திருக்க வேண்டும்.பி.காம்., பி.சி.ஏ., மற்றும் பி.பி.ஏ., பட்டதாரிகள் நிதி மேலாண்மை மற்றும் கணக்கு பிரிவில் பயிற்சியாளர் பணிக்கும், மெகட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் சிஸ்டம் என்ஜினீயர் பணிக்கும், சாப்ட்வேர் என்ஜினீயர் பணிக்கு, பி.எஸ்சி., பி.இ., பி.ெடக்., முடித்தோரும், கார்டன் மற்றும் பூங்கா பராமரிப்புக்கு பி.எஸ்சி., தோட்டக்கலை முடித்தோரும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு திருப்பூர் மாநகராட்சி பொறியியல் பிரிவை 0421 2240153 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே மாவட்டத்தில் விருப்பமுள்ளவர்கள் www.internship.nicte.india.org என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

Tags:    

Similar News