உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட நடராஜ், சரத்குமார் ஆகயோரை படத்தில் காணலாம்.

திருப்பூர் அருகே 3000கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது

Update: 2022-08-13 11:34 GMT
  • போலீசார் திருமலைபாளையம் அருகே வாகன சோதனை செய்தனர்.
  • வேனில் வந்தவரை பிடித்து விசாரித்தனர்.

திருப்பூர் :

திருப்பூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சார்பு ஆய்வாளர் கார்த்தி மற்றும் போலீசார் திருப்பூர் தாராபுரம் திருமலைபாளையம் அருகே வாகன சோதனை செய்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர். அந்த வேனில் மூடை, மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. வேனில் வந்தவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பழனி புது ஆயக்குடியை சேர்ந்த நடராஜ் (வயது 33) என்பதும், அவர் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்தி சென்று கள்ள சந்தையில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. உடன் திண்டுக்கல் கொடைக்கானல் ரோடு பகுதி சேர்ந்த டிரைவர் சரத்குமார் (25) இருந்தார். மொத்தம் 3 ஆயிரத்து 10 கிலோ ரேஷன் அரிசி மூடைகள் மற்றும் சரக்கு வேனை குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறையினர் மற்றும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக நடராஜ், சரத்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News