உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா தேசிய கொடி ஏற்றி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்ட காட்சி. அருகில் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உள்ளார்.

திருப்பத்தூரில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

Update: 2022-08-15 09:20 GMT
  • கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்
  • நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திருப்பத்தூர் கலெக்டர் அமர்குஷ்வாஹா தேசிய கொடி ஏற்றினார்.

இதனையடுத்து கலெக்டர் அமர்குஷ்வாஹா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டனர்.

இந்த விழாவில் கலெக்டர் அமர்குஷ்வாஹா திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த 238 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் பரிசு பெற்ற மாணவர்கள் 14 பேருக்கு சான்றிதழ் வழங்கினர்

144 பயனாளிகளுக்கு 1,29,14,814 ரூபாய் மதிப்பில் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் எம்.எல்.ஏ.க்கள் நல்லதம்பி, தேவராஜ் மற்றும் திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேந்திரன், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News