உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

100 நாள் வேலை பொறுப்பாளரை திட்டிய வாலிபர் மீது வழக்கு

Update: 2022-06-25 10:08 GMT
  • வழிமறித்து திட்டியுள்ளார்
  • போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் , பழனி வட்டம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் .

இவரது மனைவி ஹேமாவதி ( வயது 35 ) . இவர் அச்சமங்கலம் ஊராட்சியில் 100 நாள் திட்ட பணித்தள பொறுப்பாளராக வேலை செய்து வருகிறார்.

கடந்த 17 - ந் தேதி வேலை முடிந்ததும் ஹேமாவதி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது , மாக்கனூர் பகுதியைச்சேர்ந்த ராஜீவ் என்பவர் வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டிய தாக கூறப்படுகிறது.

இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள் ளது . பின்னர் இதுகுறித்து ஹேமாவதி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் . புகாரின் பேரில் போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்து ராஜீவிடம் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News