உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பட்டியில் அமைக்கப்பட்டு வரும் சுரங்கப்பாலம்.

மேட்டுப்பட்டியில் சுரங்கப்பாலம் 12 ஆண்டாக போராடிய மக்கள் மகிழ்ச்சி

Update: 2022-08-19 11:13 GMT
  • தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கு சுரங்கப்பாலம் அமைக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு தொடர்ந்து 12 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
  • மேட்டுப்பட்டி கிராமத்திற்குள் செல்வதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை சுரங்கப்பாலம் அமைக்க உத்தரவிட்டது.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகிலுள்ள மேட்டுப்பட்டி மற்றும் எம்.பெருமாபாளையம் கிராம மக்கள், சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கு பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.

எனவே, இப்பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கு சுரங்கப்பாலம் அமைக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு தொடர்ந்து 12 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து, சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து மேட்டுப்பட்டி கிராமத்திற்குள் செல்வதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை சுரங்கப்பாலம் அமைக்க உத்தரவிட்டது. இப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கு இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில், பாலம் அமைக்கக்கோரி போராடிய அனைத்து கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து நேற்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனையடுத்து, மேட்டுப்பட்டி மற்றும் எம்.பெருமாபாளையம் ஆகிய கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெறுவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

Tags:    

Similar News