உள்ளூர் செய்திகள்

சுவாமிமலை சிற்பக்கூடத்தில் இருந்த 8 சாமி சிலைகளும் பறிமுதல்

Published On 2022-08-10 10:20 GMT   |   Update On 2022-08-10 10:20 GMT
  • பழங்கால பஞ்சலோக சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • 2 புத்தர் சிலைகள், போக சக்தியம்மன் சிலை, சிவதாண்டவம், மீனாட்சி, விஷ்ணு, ரமணர் ஆகிய 7 பழங்கால சிலைகளை ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.

சுவாமிமலை:

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை சர்வ மானிய தெருவில் உள்ள ஸ்தபதி மாசிலாமணி என்பவரது சிற்ப கூடத்தில் பழங்கால பஞ்சலோக சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் சென்னையில் இருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், இன்ஸ்பெக்டர் இந்திரா உள்ளிட்டோர் அடங்கிய போலீசார் சிற்ப கூடத்துக்கு வந்து அங்கு இருந்த சிலைகளை ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பின்னர் 2 புத்தர் சிலைகள், போக சக்தியம்மன் சிலை, சிவதாண்டவம், மீனாட்சி, விஷ்ணு, ரமணர் ஆகிய 7 பழங்கால சிலைகளை ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.இந்த சிலைகளை சென்னையில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு எடுத்துச்செல்வதாகவும், அங்கு இந்த சிலைகள் தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளதாகவும் அவர்கள் கூறினர். சிற்ப கூடத்தில் இருந்த சிலைகளை எடுத்துச்சென்றதை அறிந்து அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சக ஸ்தபதிகள் அங்கு திரண்டு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News