உள்ளூர் செய்திகள்

விருகம்பாக்கம் அருகே இளம்பெண் தற்கொலை

Update: 2022-09-27 08:51 GMT
  • விருகம்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பம் ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி.
  • கோயம்பேடு இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் விசாரணை நடத்தி வருகிறார்.

போரூர்:

விருகம்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பம் ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி கவிதா (வயது32). இவர் 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தில் பணியாளராக வேலை பார்த்து வந்தார். குழந்தையை கவனிக்க வேண்டும் என்பதால் வேலைக்கு செல்ல வேண்டாம் என கவிதாவை ரவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மன வேதனை அடைந்த கவிதா நேற்று மாலை திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News