உள்ளூர் செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சி

Update: 2022-06-30 10:18 GMT
  • கோயம்பேடு சந்தைக்கு கடந்த மாதம் வரை தினசரி 40-க்கும் குறைவான லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தது.
  • ஆனால் கடந்த சில நாட்களாகவே மீண்டும் தக்காளியின் வரத்து அதிகரித்து வருகிறது.

போரூர்:

கோயம்பேடு மார்கெட்டுக்கு இன்று காலை 56 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தது. இதனால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனை கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.23-க்கு விற்கப்பட்டது. தற்போது வரத்து அதிகரிப்பு காரணமாக தக்காளி ரூ.13-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தக்காளி கிலோ விலை வீழ்ச்சி குறித்து மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறியதாவது:-

கோயம்பேடு சந்தைக்கு கடந்த மாதம் வரை தினசரி 40-க்கும் குறைவான லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாகவே மீண்டும் தக்காளியின் வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. விலை வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும் தக்காளி விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இனி வரும் நாட்களில் வரத்து மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது. எனவே தக்காளி விலை மேலும் குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News