உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் 2 கடைகளின் பூட்டை உடைத்து பணம், வெள்ளி பொருட்கள் கொள்ளை

Published On 2023-05-04 10:37 IST   |   Update On 2023-05-04 10:37:00 IST
  • கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 15 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஜவுளிகள் கொள்ளை போயிருந்தது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது40). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நகை பட்டறை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு வழக்கம் போல கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலை அவரது தந்தை கோபால் கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த ரூ. 12 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் வெள்ளி கொழுசுகள் திருட்டு போயிருந்தது.

தூத்துக்குடி தோப்புத்தெருவை சேர்ந்த சக்திவேல் (50) என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இன்று காலை அவர் கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 15 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஜவுளிகள் கொள்ளை போயிருந்தது. இது குறித்து முத்தையாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News