உள்ளூர் செய்திகள்

சுங்குவார்சத்திரம் அருகே 1 டன் ரேஷன் அரிசி சிக்கியது

Published On 2022-12-04 12:15 GMT   |   Update On 2022-12-04 12:15 GMT
  • வெளி மாநிலத்துக்கு கடத்தி வைக்கப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டை இருப்பதை கண்டுபிடித்தனர்.
  • ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் எடை எந்திரம் போன்றவை கைப்பற்றப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர்:

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த பிச்சிவாக்கம் கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு வந்தது. இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு தலைமையில் ஸ்ரீபெரும்புதூர் வட்ட வழங்கல் அலுவலர் ஜெயஸ்ரீ மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் புஷ்பராஜ் ஆகியோர் பிச்சிவாக்கம் கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு வெளி மாநிலத்துக்கு கடத்தி வைக்கப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டை இருப்பதை கண்டுபிடித்தனர். அதிகாரிகள் வருவதை கண்ட அரிசி கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். அங்கிருந்து ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் எடை எந்திரம் போன்றவை கைப்பற்றப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

Similar News