உள்ளூர் செய்திகள்

காந்தி பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு மன்னார்குடியில் தடை

Update: 2022-09-29 10:29 GMT
  • மாநிலம் முழுவதும் பேரணிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் தமிழக அரசு பேரணிக்கு தடை விதித்திருப்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர்:

காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதி தமிழக முழுவதும் பேரணி நடத்துவதாக ஆர்.எஸ்.எஸ் அறிவித்திருந்தது‌ அதன் பெயரில் மாவட்டங்களில் தீவிரமான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தன.

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றமும் தெரிவித்து இருந்தது. இதனால் கூடுதல் உற்சாகத்தோடு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேரணி ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டையிலும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு மாநிலம் முழுவதும் தடை விதித்துள்ளது.

பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் பேரணியால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படலாம் என்று கருதி தடை விதிக்கப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாநிலம் முழுவதும் பேரணிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் தமிழக அரசு பேரணிக்கு தடை விதித்திருப்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News