உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 2 நாளில் 1 அடி சரிவு

Update: 2022-07-02 04:07 GMT
  • மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 3 ஆயிரத்து 555 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 512 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
  • அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து வேகமாக சரிந்து வருகிறது.

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் 4 ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 3 ஆயிரத்து 500 கன அடியாக சரிந்தது. இதனால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 3 ஆயிரத்து 555 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 512 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து வேகமாக சரிந்து வருகிறது.

நேற்று முன்தினம் 104.78 அடியாக இருந்த மேடூர் அணை நீர்மட்டம் நேற்று 104.22 அடியானது. இன்று நீர்மட்டம் மேலும் சரிந்து 103. 59 அடியானது. இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரு அடிக்கு மேல் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News