உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம்-செங்கல்பட்டு நெடுஞ்சாலை பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு

Update: 2022-09-30 12:30 GMT
  • நெடுஞ்சாலையை மேம்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குனர் பி.என்.ஸ்ரீதர் ஐ.ஏ.எஸ். நேரில் பார்வையிட்டு ஆய்வு.

வாலாஜாபாத்:

தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் சென்னை கன்னியாகுமரி தொழிற்தட திட்ட அலகின் சார்பில் செங்கல்பட்டு முதல் காஞ்சிபுரம் வரையிலான நெடுஞ்சாலை எண் 58-ஐ மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு முதல் காஞ்சிபுரம் வரை நடைபெறும் நெடுஞ்சாலையை மேம்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குனர் பி.என்.ஸ்ரீதர் ஐ.ஏ.எஸ். நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு திட்ட பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின் போது சென்னை கன்னியாகுமரி தொழிற்தட திட்ட அலகின் கோட்ட பொறியாளர் லட்சுமி காந்தன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள், திட்ட மேற்பார்வையாளர்கள், ஆலோசகர் குழு, மற்றும் ஒப்பந்ததாரர் உடன் இருந்தனர்.

Similar News