உள்ளூர் செய்திகள்

காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி-மாணவரணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் தொடர் நிகழ்ச்சிகள்: அமைச்சர் அறிவிப்பு

Update: 2022-11-26 10:30 GMT
  • ஒவ்வொரு பகுதிக்கும் சென்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
  • கைப்பந்து போட்டி, இறகு பந்து போட்டி, நரிக்குறவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 40-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடு செய்துள்ளார்.

இதையொட்டி நாளை (27-ந்தேதி) முதல் தொடர் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மாங்காடு நகர தி.மு.க. மற்றும் இளைஞ ரணி-மாணவரணி சார்பில் கொடியேற்றுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பட்டூரில் நடைபெறுகிறது.

பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஏற்பாட்டில் உதயநிதி பிறந்த தினத்தை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஏழை தாய்மார்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நாளை காலை 10 மணிக்கு குரோம்பேட்டை பஸ் நிலையத்தில் நடைபெறுகிறது.

இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று மாற்றுத் திறனாளிகளுக்கும்-மகளிருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கி உணவு வழங்குகிறார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட கழக துணைச் செயலாளர் இ.கருணாநிதி எம்.எல்.ஏ. செய்துள்ளார். இதேபோல் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இதுதவிர இளைஞரணி-மாணவரணி சார்பில் மருத்துவ முகாம், கால்பந்து போட்டி, மரம் நடும் நிகழ்ச்சி, பல்லாவரத்தில் இறகு பந்து போட்டி, படப்பையில் கிரிக்கெட் போட்டி, ஆலந்தூரில் ஆணழகன் போட்டி, வெண் சீருடை வழங்குதல், அய்யப்பந்தாங்கலில் கபடி போட்டி, திருப்போரூரில் கிரிக்கெட் போட்டி, கைப்பந்து போட்டி, இறகு பந்து போட்டி, நரிக்குறவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னின்று செய்து வருகிறார்.

Similar News