உள்ளூர் செய்திகள்

கோடை மழையால் உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2023-05-04 10:41 IST   |   Update On 2023-05-04 10:41:00 IST
  • திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது.
  • கோடையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

இதன் மூலம் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீரும் விநியோகிக்கப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் ஜூனில் துவங்கும் தென்மேற்கு பருவமழை அணையின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.

தற்போது கோடை வெயில் காரணமாக அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் நீர்மட்டம் குறைய தொடங்கியது. கடந்த 30ந் தேதி அணையின் நீர்மட்டம் 56.33 அடியாக இருந்தது. 270 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் திடீரென பெய்த கோடை மழையின் காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் 46 கன அடியாகவும் நேற்று 63 கன அடியாகவும் நீர்வரத்து உள்ளது.அணையின் நீர்மட்டம் அதிகரித்து 58 .07 அடியாக உயர்ந்துள்ளது. இரண்டு நாளில் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோடையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News