உள்ளூர் செய்திகள்

கொப்பரை கிலோ ரூ.150 என நிர்ணயம் செய்யக்கோரி தேங்காய் உடைத்து விவசாயிகள் நூதன போராட்டம்

Published On 2022-06-25 08:01 GMT   |   Update On 2022-06-25 08:01 GMT
  • கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தேங்காய் உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • தேங்காய் உடைத்ததால் அந்த பகுதியில் தேங்காய் துண்டுகள் சிதறி குவியலாக காட்சியளித்தது.

பட்டுக்கோட்டை:

மத்திய, மாநில அரசுகள் கொப்பரை தேங்காய் கிலோ ஒன்று ரூ.150 விலை நிர்ணயம் செய்ய வேண்டும்,உரித்த தேங்காயை கிலோ ரூ.50 நிர்ணயம் செய்து அரசே கொள்முதல்செய்ய வேண்டும், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்,வெளிநா டுகளிலிருந்து பாமாயில் இறக்குமதியை தடைசெய்ய வேண்டும் உள்ளிட்டகோரி க்கைகளை வலியு றுத்தி போராட்டம் நடத்த தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் 500-க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் திரண்டனர்.

பின்னர் பட்டுக்கோட்டை- அறந்தாங்கி முக்கத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து முக்கிய வீதிகள் வழியாக கையில் தேங்காயுடன் ஊர்வலமாக புறப்பட்டு பஸ் நிலையத்தை வந்தடைந்தனர்.

இதையடுத்து கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தேங்காய் உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் தேங்காய் உடைத்ததால் அந்த பகுதியில் தேங்காய் துண்டுகள் சிதறி குவியலாக காட்சியளித்தது.

1 மணி நேரத்துக்கும் மேல் நீடித்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News