உள்ளூர் செய்திகள்

மாதவரத்தில் ஆன்லைன் நிறுவன குடோனில் செல்போன்கள் திருட்டு- ஊழியர் கைது

Update: 2022-09-27 08:42 GMT
  • மாதவரம் ஜி.எஸ்.டி சாலையில் பிரபல ஆன்லைன் நிறுவனத்தின் விற்பனை குடோன் உள்ளது.
  • போலீசார் வழக்குப் பதிவு செய்து கவுதமை கைது செய்தனர்.

கொளத்தூர்:

மாதவரம் ஜி.எஸ்.டி சாலையில் பிரபல ஆன்லைன் நிறுவனத்தின் விற்பனை குடோன் உள்ளது. இங்கு அடிக்கடி செல்போன்கள் மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் திருடுபோனது.

கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஊழியர்கள் ஆய்வு செய்தபோது அங்கு வேலைபார்த்து வரும் ஆன்லைன் டெலிவரி ஊழியரான கவுதம் என்பவர் 9 செல்போன் உள்ளிட்ட ரூ. 1 லட்சம் மதிப்புள்ள உதிரி பாகங்களை திருடியது தெரிய வந்தது. இதுகுறித்து மாதவரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து கவுதமை கைது செய்தனர்.

Similar News