உள்ளூர் செய்திகள்

கோவையில் பெண்ணிடம் கந்து வட்டி கேட்டும் மிரட்டிய வாலிபர் கைது

Published On 2022-06-29 04:34 GMT   |   Update On 2022-06-29 04:34 GMT
  • கலைவாணி மாதாமாதம் ரூ.2,300 என செலுத்தி கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தி விட்டார்.
  • கலைவாணி கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

கோவை:

கோவை கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா (வயது 27). இவரது மனைவி கலைவாணி (25). இவர்கள் இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் திருமண செலவுக்காக கிணத்துக்கடவு கிருஷ்ண சாமிபுரம் பகுதியை சேர்ந்த பூபதி சிவராஜ் (25) என்பவரிடம் இருந்து வட்டிக்கு ரூ.17,500 கடனாக வாங்கினர்.

இந்த தொகையை கலைவாணி மாதாமாதம் ரூ.2,300 என செலுத்தி கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தி விட்டார்.

இந்நிலையில் பூபதி சிவராஜ், கலைவாணியின் வீட்டிற்கு சென்று கடன் தொகை போக ரூ.2,300 வட்டி தொகை தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டார். அப்போது கலைவாணி பணத்தை தர மறுத்தார். இதனால் பூபதி சிவராஜ் அவரது வீட்டில் இருந்த மொபட்டை வட்டித்தொகை கொடுக்காததால் எடுத்து சென்றார். மேலும், கலைவாணியை அடிக்கடி வட்டி பணம் கேட்டும் மிரட்டினார்.

இதுகுறித்து கலைவாணி கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், கந்துவட்டி தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதையடுத்து கந்து வட்டி கேட்டு மிரட்டிய பூபதி சிவராஜை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News