உள்ளூர் செய்திகள்

தண்டையார்பேட்டையில் 25 மாநகராட்சி துப்புரவு வாகனத்தில் பேட்டரி திருட்டு

Update: 2022-06-28 08:44 GMT
25 வாகனங்களில் இருந்த பேட்டரிகளை மர்மநபர்கள் திருடி சென்று இருப்பது தெரிந்தது.

ராயபுரம்:

தண்டையார்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட கைலாச தெருவில் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்படும் 25-க்கும் மேற்பட்ட பேட்டரி வாகனங்கள் பாதுகாப்பு அறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை வழக்கம்போல் துப்புரவு பணியாளர்கள் பேட்டரி வாகனங்களை எடுக்க வந்தபோது அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.25 வாகனங்களில் இருந்த பேட்டரிகளை மர்மநபர்கள் திருடி சென்று இருப்பது தெரிந்தது.

Tags:    

Similar News