உள்ளூர் செய்திகள்

புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து திருவள்ளூரில் பகுஜன் சமாஜ் கட்சி ஆர்ப்பாட்டம்

Published On 2022-11-26 11:30 GMT   |   Update On 2022-11-26 11:30 GMT
  • பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை கண்டித்தும் மின்கட்டண உயர்வு மற்றும் பால் விலை உயர்வை திரும்ப பெற கோரியும் ஆர்ப்பாட்டம்.
  • ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கீழானூர் பகுஜன் பிரேம் தலைமை தாங்கினார்.

திருவள்ளூர்:

திருவள்ளூரில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை கண்டித்தும் மின்கட்டண உயர்வு மற்றும் பால் விலை உயர்வை திரும்ப பெற கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கீழானூர் பகுஜன் பிரேம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் புங்கத்தூர் தேவா வரவேற்றார். தொகுதி தலைவர் சுரேஷ், மாவட்ட நிர்வாகிகள் அம்பேத் ஆனந்தன்,ஜெய்பீம் செல்வம், அரண் வீராவிஜி, வெற்றிவேந்தன், சேலை ராஜேஷ், தண்ணீர்குளம் ராஜேஷ், கடம்பத்தூர் அரி, பாலா, சித்துக்காடு ரவிக்குமார், செவ்வை ராஜி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கீழானூர் உஷா பிரேம், வதட்டூர் நாகராஜ், திருநின்றவூர் நகராட்சி கவுன்சிலர்கள் மைக்கேல், கோகுல், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் திருத்தணி டி.மைக்கேல்தாஸ் கண்டன உரையாற்றினார். இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத் தலைவர் பொத்தூர் சுரேஷ். மத்திய சென்னை மாவட்ட தலைவர் சமரன், ராணிப்பேட்டை மாவட்ட தலைவரும் ஊராட்சி தலைவருமான பிரவீன், திருநின்றவூர் சார்லஸ், ஆட்டோ ஓட்டுநர் சங்கத் தலைவர் ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் பூவை தொகுதி தலைவர் டில்லி நன்றி கூறினார். இதில் மாவட்ட,தொகுதி, நகர, ஒன்றிய நிர்வாகிகள், பகுஜன் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் மற்றும் பொது மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Similar News