உள்ளூர் செய்திகள்

இரட்டை தலைமை கலைப்பு தன்னிச்சையானது- ஓபிஎஸ் தரப்பு வாதம்

Published On 2023-03-22 10:48 IST   |   Update On 2023-03-22 11:04:00 IST
  • கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட நேரங்களில் ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்காக முக்கிய பங்காற்றியுள்ளார்.
  • பன்னீர்செல்வம் முதல்வராக, நிதி அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. விடுமுறை தினமான இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வழக்குடன் சேர்த்து பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய மனுக்களும் சேர்த்து விசாரிக்கப்படுகின்றன.

வழக்கு தொடங்கியதும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் வாதங்களை முன் வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பன்னீர்செல்வம் முதல்வராக, நிதி அமைச்சராக பதவி வகித்துள்ளார். 1977 முதல் கட்சியில் இருக்கிறார்.

கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட நேரங்களில் ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்காக முக்கிய பங்காற்றியுள்ளார். ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை நீடிக்கிறது. எந்த வாய்ப்பும் அளிக்காமல் எந்த காரணமும் கூறாமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர், இது தன்னிச்சையானது, நியாயமற்றது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன் வைத்துள்ளார்.

Tags:    

Similar News