உள்ளூர் செய்திகள்

கல்லூரி கனவு வழிகாட்டி புத்தகத்தை மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார். அருகில் கலெக்டர் விசாகன் உள்பட பலர் உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்களின் கல்வி கனவு திட்டம் தொடக்கம் அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார்

Published On 2022-07-03 05:17 GMT   |   Update On 2022-07-03 05:17 GMT
  • ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர் களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
  • விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சக்கரபாணி கல்லூரி கனவு வழிகாட்டி புத்தகத்தை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

திண்டுக்கல்:

'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்க ளின் உயர்கல்விக்கு வழிகாட்டும் 'கல்லூரி கனவு' நிகழ்ச்சி பள்ளிக்கல்வித்துறையின் மூலம் திண்டுக்கல் ஜி.டி.என். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அமைச்சர்அர.சக்கரபாணி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, கல்லூரி கனவு வழிகாட்டி புத்தகத்தை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

வேலுச்சாமி எம்.பி., காந்திராஜன் எம்.எல்.ஏ., திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, உதவி காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன், மாவட்ட ஊராட்சித்தலைவர் பாஸ்கரன், ஜி.டி.என். கல்விக் குழும தலைவர் ரெத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் 3500-க்கும் மேற்பட்ட 12ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

அப்போது அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது:-

'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் 'கல்லூரி கனவு' நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு முடித்த மாண–வர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் 'கல்லூரிக் கனவு' நிகழ்ச்சி நடை–பெறுகிறது.

இந்திய அளவில் தமிழகம் தொழில்துறையில் 14வது இடத்தில் இருந்து வந்தது. முதல்-அைமச்சர் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் பயனாக தற்போது தமிழகம் 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. சென்னையில் 4ந் தேதி முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் சுமார் 90 லட்சம் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர். அவ–ர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்தில் தொடங்கப்படும் தொழில் நிறுவனங்களில் தமிழகத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலை–வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும், அதை மாவட்ட கலெக்டர்கள் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என்று முதல்-அமை–ச்சர் அறிவுறுத்தியு–ள்ளார்.

கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் திண்டுக்கல் மாவ–ட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் ஆத்தூரில் ஒரு கல்லூரி, உயர்கல்வித்துறை சார்பில் ரெட்டியார்சத்திரம், தொப்பம்பட்டி ஆகிய இடங்களில் தலா ஒரு கல்லூரி, இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் ஒட்டன்சத்திரத்தில் ஒரு கல்லூரி மற்றும் பழனியில் ஒரு சித்தா கல்லூரி ஆகியவை அறிவிக்கப்பட்டு, தொடங்க–ப்பட்டு வருகின்றன.

மேலும், கொடைக்கானலில் ஒரு கூட்டுறவு பயிற்சி மையம் அமைக்கப்படவுள்ளது. இப்படி 5 கல்லூரிகள், ஒரு பயிற்சி மையம் என 6 கல்வி நிறுவனங்கள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கிடைத்துள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் தொகுதிக்கு அடுத்த ஆண்டு அரசு கல்லூரி கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒட்டன்சத்திரத்தில் ஒரு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. விரைவில் தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News