உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் முதன்மை மாவட்ட நீதிபதி மதுசூதனன் தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

தஞ்சையில் லோக் அதாலத் சிறப்பு முகாமில் வழக்குகளுக்கு தீர்வு

Update: 2022-06-26 10:24 GMT
  • நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
  • இதில் சார்பு நீதிபதி (பொ) முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்:

தஞ்சையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சிறப்பு முகாம் நடந்தது. இதற்கு முதன்மை மாவட்ட நீதிபதி மதுசூதனன் தலைமை தாங்கினார்.

இதில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், குடும்ப நல வழக்கு, காசோலை மோசடி வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள் மற்றும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இவற்றில் பல வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்நிகழ்வில் சார்பு நீதிபதி (பொ) முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மக்கள் நீதிமன்றம் நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News