உள்ளூர் செய்திகள்

தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கல்லூரியில் பணியில் உள்ள போலீசார் பதவி உயர்வுக்கான தேர்வு

பணியில் உள்ள போலீசார் பதவி உயர்வுக்கான தேர்வு

Update: 2022-06-26 10:20 GMT
  • தஞ்சை மாவட்டத்தில் 4 மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
  • தேர்வுக்காக 672 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

தஞ்சாவூர்:

தமிழக போலீஸ் துறையில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் 4 மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று பணியில் உள்ள போலீசார் பதவி உயர்வுக்கான எழுத்துத் தேர்வு நடந்தது. தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் இந்த தேர்வு நடைபெற்றது.

தேர்வுக்காக 672 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் தேர்வு எழுத வராதவர்களின் விவரம் மாலையில் தெரியவரும்.

இந்த தேர்வை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News