உள்ளூர் செய்திகள்

கடல் சீற்றத்தால் மக்கள் பாதிப்பு- நேரில் சென்று பார்வையிட்டு உதவிய விஜய் வசந்த் எம்.பி.

Update: 2022-07-03 12:00 GMT
  • கடந்த சில நாட்களாக கடலில் ராட்சத அலைகள் எழும்பியது
  • கடற்கரையையொட்டி உள்ள வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது

கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக கடலில் ராட்சத அலைகள் எழும்பியதால், கடலோர கிராமங்களில் கடல் நீர் புகுந்தது. கடற்கரையையொட்டி உள்ள வீடுகளுக்குள்ளும் கடல் நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

குமரி மாவட்ட கடலோர கிராமமான அழிக்கலில் கடுமையான காற்று மூலம் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், அந்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்க ஏற்பாடு செய்தார்.

Tags:    

Similar News