உள்ளூர் செய்திகள்

நிலக்கோட்ைடபேரூராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.

நிலக்கோட்டையில் ரூ.1 கோடி மதிப்பில் பஸ் நிலைய கட்டிட பணிகள் பேரூராட்சியில் தீர்மானம்

Update: 2022-09-27 05:09 GMT
  • நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் வார்டு கவுன்சிலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
  • கவுன்சிலர்கள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி தமிழக முதல்-அமைச்சர், மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் வார்டு கவுன்சிலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் தலைமையில் நடைபெற்றது.

துணைத் தலைவர் முருகேசன், பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலக்கோட்டை தி.மு. க. கவுன்சிலர் ஜோசப் அடிப்படை வசதிகள் குறித்து எந்தவிதமான பேச்சுவார்த்தையும் இல்லாமல் கூட்டம் நடத்தினால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் முருகேசன்: - கூட்டம் நடத்தும் போது அனைத்து கவுன்சிலர்களுக்கும் உரிய தகவல் பரிமாறப்பட வேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே கூட்டம் நடத்த வழிவகை செய்யப்படும் என தெரிவித்தார்.

தலைமை அலுவலக பணியாளர் பாண்டியராஜன் கூட்டத்திற்கான அஜந்தா நகலை வாசித்தார்.

சுகாதார ஆய்வாளர் சடகோபி தீர்மானங்கள் பற்றிய விவாதம் பேசப்படும் என்றார்.

தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் பேசுகையில், நிலக்கோட்டை பேரூராட்சியில் உள்ள பஸ் நிலையத்தை நவீனப்படுத்த வேண்டும் என்று பல வருடங்களாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பழுதடைந்த கட்டங்களை இடித்து விட்டு முதல்-அமைச்சர் அனுமதியோடு ரூ.1.05 கோடி மதிப்பில் பஸ் நிலையம் முன்பு புதிய கட்டிடங்கள் கட்ட தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

8, 9 வது வார்டுகளில் வடிகால் வசதியுடன் கூடிய சிமெண்ட் தளம் அமைக்க ரூ.5 லட்சத்தில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு ள்ளது. வளம் மீட்பு பூங்கா மேம்படுத்த நிலக்கோட்டை தாசில்தாரிடம் அரசு நிலம் 10 ஏக்கர் வேண்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என பேசினார்.

கவுன்சிலர்கள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி தமிழக முதல்-அமைச்சர், மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News