உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

பெரியகுளம் அருகே சாலை பணியாளர் மர்ம சாவு

Published On 2023-05-14 10:55 IST   |   Update On 2023-05-14 10:55:00 IST
  • சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அங்கு அவர் சேரில் அமர்ந்த நிலையி லேயே இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
  • அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியகுளம்:

பெரியகுளம் அருகே கைலாசபட்டியை சேர்ந்த வர் சரவணக்குமார் (வயது 39). சாலை பணியாளர்.இவரது மனைவி பிரிந்து சென்ற நிலையில் அபிநயா என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 மகன் உள்ளான். இந்த நிலையில் அபிநயா தனது குழந்தை யுடன் மயிலாடு ம்பாறையில் நடைபெற்ற திருவிழாவிற்கு சென்று விட்டார். சரவ ணக்குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அங்கு சரவணக்குமார் சேரில் அமர்ந்த நிலையி லேயே இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தென்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அழுகிய நிலையில் இருந்த சரவணக்குமாரின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News