உள்ளூர் செய்திகள்

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்ற போது எடுத்தபடம்.


கோவில்பட்டியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

Published On 2022-06-29 09:11 GMT   |   Update On 2022-06-29 09:11 GMT
  • வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியப்பாண்டியன் தலைமை தாங்கினார்.
  • 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை இயக்க கூடாது என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியப்பாண்டியன் தலைமை தாங்கி போக்குவரத்து சட்டம் மற்றும் விதிகள் குறித்தும், விபத்தில்லாமல் சாலையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை இயக்க கூடாது என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மோட்டார் வாகன ஆய்வாளர் (நிலை 2) சுரேஷ் விஸ்வநாதன் பஸ்களில் பாதுகாப்பாக பயணம் செய்வது குறித்தும், போக்குவரத்து சிக்னல்கள் குறித்தும் விளக்கிப் பேசினார்.

கருத்தரங்கில், பள்ளி நிர்வாக அதிகாரி சபரி முத்துகுமார் உட்பட திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். உதவி தலைமையாசிரியர் செல்வகாந்தி நன்றி கூறினார்.

Tags:    

Similar News