உள்ளூர் செய்திகள்

கட்டுப்பாட்டு பகுதி 9 ஆக உயர்வு

Published On 2022-06-29 10:07 GMT   |   Update On 2022-06-29 10:07 GMT
  • கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது.
  • மைக்ரோ கன்டெய்ன்மென்ட் பகுதி களாக மாற்றப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 100-க்கும் மேல் அதிகரித்து வந்தது.

இதனை கட்டுப்ப டுத்த மாவட்ட சுகாதாரத்து றையினர் சார்பில் பரிசோத னையை அதிகரித்தல் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை மாவட் டம் குரும்ப பாளையம் பகுதி யில் உள்ள ஒரே வீதியில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு, ஆர்.எஸ்.புரத்தில் ஒரே வீட்டில் 3 பேருக்கு கொரோ னா நோய் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

இதே போன்று வடவள்ளி, தொண்டா முத்துார், பேரூர் செட்டிப் பாளையம் உள்ளிட்ட 9 இடங்கள் மைக்ரோ கன்டெய்ன்மென்ட் பகுதிக ளாக அமைக் கப்பட்டு ள்ளன.

இப் பகுதிகளில் தூய்மை பணி யாளர்களை கொண்டு கிருமி நாசினி தெளிப்பது, பாதிக் கப்பட்டோரை கண்காணிப்பது போன்ற பணிகள் மேற்கொண்டு வரு கின்றனர்.

இது குறித்து சுகா தாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் தற்போது 9 இடங் களை மைக்ரோ கன் டெய்ன ்மென்ட் பகுதி களாக மாற்றப்பட்டுள்ளன. ஒரு வீட்டில் 3 பேருக்கு மேல் நோய் பாதிப்பு இருந்தால் வீட்டை மட்டும் மைக்ரோ கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஒரு வீதியில் பாதிக்கு மேல் எண் ணிக்கை அதிகம் இருந்தால் வீதி முழுவதும் கட்டுப்பாட்டு பகுதியாக மாற் றப்படும். இந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படும்.

பாதிக் கப்பட்ட நபர்களுடன் தொடர்பு டைய வர்களுக்கு கொ ரோனா பரிசோதனை மேற ்கொள்ளப்படுகிறது. மக்கள் அனைவரும் வழிகாட்டு நெறி முறைகளை கட்டாயம் கடைப் பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News