உள்ளூர் செய்திகள்

 விழுப்புரம் புதிய பஸ் நிலைய சுவரில் தூய்மை பணி குறித்து விழிப்புணர்வு ஓவியத்தை மாணவர்கள் வரைந்தனர். 

விழுப்புரம் பஸ் நிலைய சுவரில் தூய்மை பணி குறித்து ஓவியம் வரைந்த மாணவர்கள்

Published On 2022-06-26 07:19 GMT   |   Update On 2022-06-26 07:19 GMT
  • விழுப்புரம் பஸ் நிலைய சுவரில் தூய்மை பணி குறித்து மாணவர்கள் ஓவியம் வரைந்தனர்.
  • டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ. நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, நகராட்சி கமிஷனர் சுரேந்திர ஷா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

விழுப்புரம் :

விழுப்புரம் நகராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம் விழுப்புரம் புதியபஸ் நிலையத்தின் சுற்று சுவர்களில் பொதுமக்களை கவரும் வண்ணம் விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் என் நகரம் என் பெருமை என்ற அடிப்படையில் நகரத்தை தூய்மையாக வைத்திருக்க கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார். இதில் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ. நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, நகராட்சி கமிஷனர் சுரேந்திர ஷா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

ரோட்டரி சங்கம், லயன்ஸ் சங்கம், சிறுவர் சிறுமியர் உள்ளிட்ட 8 தொண்டு நிறுவனங்கள் கலந்துகொண்டு புதிய பஸ் நிலையத்தில் சுற்று சுவர்களில் பொதுமக்கள் எப்படி நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்போக்குவரத்து விதிகளை எப்படி கடைபிடிக்க வேண்டும். சிகரெட் பீடி போன்ற பொருட்களை புகைத்தால் கேன்சர் வரும் உள்ளிட்ட விழிப்புணர்வு ஓவியம் வரைந்தனர்.

Tags:    

Similar News