உள்ளூர் செய்திகள்

ராமேசுவரம் பகுதிக்கு சிறப்பு ெரயில்களை இயக்க வேண்டும்

Published On 2022-09-29 08:32 GMT   |   Update On 2022-09-29 08:32 GMT
  • ராமேசுவரம் பகுதிக்கு சிறப்பு ெரயில்களை இயக்க வேண்டும் என மாவட்ட வா்த்தக சங்கத் தலைவா் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • இந்தப் பகுதி மக்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றமாக உள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட வா்த்தக சங்கத் தலைவா் ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

புண்ணிய ஸ்தலமான ராமேசு வரத்துக்கு ஆண்டு தோறும் கோடிக்க ணக்கான பக்தர்கள், சுற்றுலா பய ணி கள் வந்து செல்கின்றனா். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம், இது தவிர தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் ஆயிரக்கணக்கான ராம நாதபுரம் மாவட்ட தொழி லாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இவர்கள் தீபாவளி பண்டி கையை கொண்டாட சொந்த ஊர் திரும்பும் போது பல்வேறு இடை யூறுகளை சந்தித்து வரு கின்றனர். ஆண்டு தோறும் அதிக கட்டணம் கொடுத்து ஆம்னி பஸ்களில் வந்து சேர வேண்டிய நிலையில் உள்ளனர், சில சமயங்க ளில் நேரடி பஸ் இல்லாத நிலையில் பல்வேறு வழித்த டங்கள் வழியாக சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.

இதனால் பண விரயம், மன உளைச்சல் ஏற்பட்டு பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையை போக்க தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ெரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ெரயில்வே அறிவித்துள்ளது. ஆனால், ராமநாதபுரம், ராமேசுவரம் பகுதிக்கு சிறப்பு ெரயில்கள் அறிவிக்கப்படவில்லை. இந்தப் பகுதி மக்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றமாக உள்ளது.

ஆகவே, தீபாவளி பண்டிகை மற்றும் அமாவாசை போன்ற விசேஷ நாள்களில் ராமநாதபுரம் பகுதிக்கு சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News