உள்ளூர் செய்திகள்

ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்ல நூற்றாண்டு விழா- தபால் உறையை வெளியிடுகிறார் கவர்னர் ஆர்.என்.ரவி

Published On 2022-06-25 09:51 GMT   |   Update On 2022-06-25 09:51 GMT
  • தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை விருந்தினராக பங்கேற்று பயனாளிகளுக்கு பொருட்களை வழங்குகிறார்.
  • கவுரவ விருந்தினர்களாக துக்ளக் வார இதழ் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தின் துணைத்தலைவர் டாக்டர் நல்லி குப்புசுவாமி செட்டி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

சென்னை:

சென்னை மயிலாப்பூர் சர் பி.எஸ். சிவசாமி சாலையில் உள்ள ராம கிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தின் முகப்பு கட்டிடமான 'ஏழைகளின் அரண்மனை' மற்றும் உறைவிட உயர்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழாக்கள் இல்லத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 4 அமர்வுகளில் விமரிசையாக நடைபெற உள்ளன.

நாளை காலை 9.30 மணிக்கு ஸ்தூபம் திறப்பு விழா நடக்கிறது. ஏழைகளின் அரண்மனைக்கு அடிக்கல் நாட்டி அக்கட்டிடத்தை திறந்து வைத்த பரமபூஜனீய ஸ்ரீமத் சுவாமி பிரம்மானந்தஜி மகராஜ் நினைவாக 'ஏழைகளின் அரண்மனை' அருகே நிறுவப்பட்டுள்ள ஸ்தூபத்தை பரமபூஜனீய ஸ்ரீமத் சுவாமி கவுதமானந்தஜி மகராஜ் திறந்து வைக்கிறார்.

காலை 10 மணிக்கு நடைபெறும் முதல் அமர்வுக்கு சென்னை ஸ்ரீராம கிருஷ்ண மடம் தலைவரும், ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் துறைத்தலைவருமான பரமபூஜனீய ஸ்ரீமத் சுவாமி கவுதமானந்தஜி மகராஜ் தலைமை தாங்கி ஆசியுரை வழங்குகிறார்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை விருந்தினராக பங்கேற்று பயனாளிகளுக்கு பொருட்களை வழங்குகிறார். மேலும் விழாவின் முதல் நாள் தபால் உறையை வெளியிடுகிறார்.

கவுரவ விருந்தினர்களாக தமிழ்நாடு சர்க்கிள் தலைமை போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் பி.செல்வகுமாரி, துக்ளக் வார இதழ் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தின் துணைத்தலைவர் டாக்டர் நல்லி குப்புசுவாமி செட்டி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

மதியம் 12 மணிக்கு நடைபெறும் 2-வது அமர்வுக்கு தி.நகர் ராமகிருஷ்ண மிஷன் ஆஷ்ரமம் செயலர் தவத்திரு சுவாமி பத்மஸ்தானந்தஜி மகராஜ் தலைமை தாங்குகிறார். கவுரவ விருந்தினர்களாக தமிழக அரசின் பொதுத்துறை செயலர் டி.ஜகந்நாதன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ.பாலகுருசாமி பங்கேற்கிறார்கள்.

பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் 3-வது அமர்வுக்கு சென்னை ராம கிருஷ்ணமிஷன் வித்யாபீடம் மற்றும் விவேகானந்தா கல்லூரி செயலர் தவத்திரு சுவாமி சுகதேவானந்தஜி மகராஜ் தலைமை தாங்குகிறார். இதில் கவுரவ விருந்தினர்களாக சென்னை சுந்தரம் பைனான்ஸ் லிமிடெட் இயக்குனர் டி.டி.ஸ்ரீனிவாச ராகவன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷையன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

மாலை 5.30 மணிக்கு நடைபெறும் 4-வது அமர்வுக்கு மைசூரு ஸ்ரீ ராமகிருஷ்ண ஆஷ்ரமம் தலைரும், ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் அறங்காவலருமான தவத்திரு சுவாமி முக்திதானந்தஜி மகராஜ் தலைமை தாங்குகிறார். கவுரவ விருந்தினர்களாக சென்னை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இயக்கு னர் பேராசிரியர் வி.காமகோடி, இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட் மற்றும் மேனேஜ்மெண்ட் அக்க வுண்டர்ட்ஸ் ஆப் இந்தியா தலைவர் பி.ராஜுஅய்யர், கத்தார் தோஹா வங்கி குழும முன்னாள் தலைவர் டாக்டர் ஆர்.சீத்தாராமன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நூற்றாண்டு விழாக்களில் பங்கேற்குமாறு இதன் செயலர் சுவாமி சத்ய ஞானானந்தர் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags:    

Similar News