உள்ளூர் செய்திகள்

வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய பஞ்சர் கடைக்காரர்

Update: 2022-06-30 10:32 GMT
  • நாகர் கூடல் வனப்பகுதியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
  • உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தருமபுரி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த நாகர்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (56). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் செல்வம் நாகர்கோவில் பகுதியில் பஞ்சர் கடை வைத்து தொழில் செய்து வந்துள்ளார்.

இவர் நாகர்கோவில் வனப்பகுதியில் முயல் வேட்டைக்கு சென்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. நேற்று நாகர் கூடல் வனப்பகுதியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வனப்பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் பார்த்து தகவல் தெரிவித்ததை அடுத்து இண்டூர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News