உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

முல்லை பெரியாறு அணை பற்றி அவதூறு பிரசாரம் தமிழக- கேரள எல்லையில் நாளை முற்றுகை போராட்டம்

Published On 2022-08-09 06:31 GMT   |   Update On 2022-08-09 06:31 GMT
  • முல்லை பெரியாறு அணை பற்றி தவறான தகவல்களை பரப்பி வருவதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
  • நடவடிக்கை எடுக்க கோரி தமிழக -கேரள எல்லைகளான லோயர் கேம்ப், கம்ப ம்மெட்டு, போடிமெட்டு பகுதிகளில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடலூர்:

முல்லை பெரியாறு அணை பற்றி தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது கேரள அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக-கேரள எல்லையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக ஒருங்கிணைந்த 5 மாவட்ட விவசாய சங்கத்தலைவர் எஸ்.ஆர்.தேவர் தெரிவித்து ள்ளார். இதுபற்றி தமிழக, கேரள முதல்-அமைச்ச ர்களுக்கு அவர் அனுப்பியுள்ள மனுவில் ெதரிவித்துள்ள தாவது:

முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 138 அடியை கடந்துள்ளது. கடந்த 5ம் தேதி இடுக்கி அணைக்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணையிலிருந்து தண்ணீர் செல்லும் பகுதி தோணி ஆறு என்றும், குளமாவு அணையிலிருந்து தண்ணீர் செல்லும் பகுதி குளமாவு ஆறு என்றும் அழைக்கப்பட வேண்டும்.

அதைவிடுத்து பெரியாறு என்று அழைப்பது கேரள மக்களிடம் முல்லைப் பெரியாற்றை பற்றி அச்சம் கொள்ளச் செய்யும் பிரசாரம் ஆகும்.

மேலும் பேரிடர் முகாம்களையும் அமைத்து மாயத்தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். இதை கேரள தொலைக்காட்சி களும், ஊடகங்களும் அணை உடையும் அபாயம் என அவதூறு பரப்பி வருகின்றனர். அணை இடிவதுபோல் வீடியோ பாடல் சமூக வலைதள ங்களில் பதிவேற்றம் செய்து மக்களை அச்சப்பட வைக்கின்றனர்.

இந்நிலையை கேரள முதல்-அமைச்சர் தடுக்க வேண்டும். கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயனிடம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.

இதை வலியுறுத்தி தமிழக -கேரள எல்லைகளான லோயர் கேம்ப், கம்ப ம்மெட்டு, போடிமெட்டு பகுதிகளில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News