உள்ளூர் செய்திகள்

டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Published On 2022-07-04 09:26 GMT   |   Update On 2022-07-04 09:26 GMT
  • துப்புரவு பணியாளர்கள் 10 வாகனம் மூலம் தலா 5 பேர் என தனித்தனி குழுவாக பிரிந்து பயனற்ற பழைய டயர்களை அகற்றினர்.
  • மழை காலம் தொடங்குவதை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் வெளிப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கும்பகோணம்:

பருவமழை தொடங்கு வதை முன்னிட்டு, கும்பகோணம் மாநகராட்சி பகுதியிலுள்ள 48 வார்டு களிலும் ஒருங்கிணைந்த டெங்கு தடுப்பு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில், மாநகராட்சி பகுதியிலுள்ள அனைத்து தெருக்கள் மற்றும் காலிமனைகளில் மாநகர் நல அலுவலர் பிரேமா தலைமையில் சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் துப்புரவு பணியாளர்கள் 10 வாகனம் மூலம் தலா 5 பேர் என தனித்தனி குழுவாக பிரிந்து பயனற்ற பழைய டயர்களை அகற்றினர். அந்தவகையில் மொத்தம் 2 டன் எடையுள்ள டயர்கள் சேகரித்து அகற்றப்பட்டன.

இதுகுறித்து மாநகராட்சி நகர்நல அலுவலர் பிரேமா கூறுகையில், மழை காலம் தொடங்குவதை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் வெளிப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பழைய டயர்கள், கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் டப்பாக்களை அகற்ற வேண்டும். அப்போது தான் டெங்கு போன்ற காய்ச்சல் வருவதை தடுக்க முடியும். வீடுகள், வணிக நிறுவனங்கள், அரசின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News