உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

குளத்தை மீட்டுத்தர பொதுமக்கள் கலெக்டருக்கு மனு

Update: 2022-09-27 07:51 GMT
  • என்.பெருமாள் கோவில்பட்டியில் உள்ள குளத்தை மீட்டுத்தரக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
  • அசம்பாவிதம் ஏற்படவும் வாய்ப்பு ள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்து ள்ளனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகில் உள்ள அடியனூத்து கிராமம் என்.பெருமாள் கோவி ல்பட்டியில் மீராராவுத்தர் குளம் உள்ளது. பருவமழை காலங்களில் இதில் மீன் வாங்கிவிட்டு சுற்றுப்புற பகுதி மக்கள் மீன்பிடி திருவிழா நடத்துவது வழக்கம்.

கடந்த ஆண்டு வரை இந்த திருவிழா நடத்த ப்ப ட்டது. இந்நி லையில் மேற்கு மரியநாத புரத்தை சேர்ந்த தனிநபர் இந்த குளத்தை ஏலம் எடுத்ததாகக் கூறி குளத்தின் கரையை சுத்தம் செய்து இங்கேயே தங்க ஏற்பாடு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஊர் நாட்டாண்மை வீரப்பன் தலைமையில் அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர், எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரி களுக்கு மனு அனுப்பி உள்ளனர்.

அந்த மனுவில் இந்த குளத்தை தனிநபர் ஏலம் எடுத்து தனது கட்டு ப்பாட்டில் வைத்திருப்பதால் மீண்டும் மீன்பிடி திருவிழா நடத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அசம்பா விதம் ஏற்படவும் வாய்ப்பு ள்ளதாக பொது மக்கள் அச்சமடைந்து ள்ளனர். எனவே வெளியேற்றி இப்பகுதி மக்களுக்கு பாது காப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என தங்கள் மனுவில் தெரிவித்துள்ள னர்.

Tags:    

Similar News