உள்ளூர் செய்திகள்

வீரபாண்டி அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை வேண்டி மனு வழங்கப்பட்ட காட்சி

வீரபாண்டி அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கலெக்டரிடம் மனு

Update: 2022-06-27 11:02 GMT
  • கல்வி பயில 42வகுப்பறைகள் தேவைப்படுகிறது, ஆனால் தற்பொழுது 20 வகுப்பறைகள் மட்டுமே உள்ளது.
  • எஸ்.எப்.எண் 432மற்றும் 433 ஆகிய எண்களில் 10ஏக்கர் நிலம் உள்ளது

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்திடம், திருப்பூர் 54- வது வார்டு உறுப்பினர் சி. அருணாசலம் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியானது 1927 ம் ஆண்டு தொடக்கப்பள்ளியாகவும், 1984ம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாகவும் 2002-ம்ஆண்டு உயர்நிலைப்பள்ளியாகவும் 2010ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கல்வி பயில 42வகுப்பறைகள் தேவைப்படுகிறது. ஆனால் தற்பொழுது 20வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. மேலும் 22வகுப்பறைகள் தேவைப்படும் நிலையில் மாணவ மாணவிகள் வராண்டாவில் அமர்ந்து கல்வி கற்று வருகின்றனர். வருவாய் துறையின் மூலம் பெறப்பட்ட தகவலின்படி எஸ்.எப்.எண் 432மற்றும் 433 ஆகிய எண்களில் 10ஏக்கர் நிலம் உள்ளது.

இது அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது. மேலும் எஸ்.எப்.எண் 458 5ஏக்கர் நிலம் காளிகுமாரசுவாமி திருக்கோவில் டிரஸ்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த இரண்டு இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மனு வழங்கப்பட்டுள்ளது.   

Tags:    

Similar News