உள்ளூர் செய்திகள்

சித்தையன்கோட்டையில் முன்னாள் எம்.பி. அப்துல்காதர் வீட்டில் ப.சிதம்பரம் ஆலோசனை நடத்தினார்.

சித்தையன்கோட்டைக்கு வந்து துக்கம் விசாரித்த ப.சிதம்பரம்

Update: 2022-06-28 05:57 GMT
  • இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும், ராஜ்ய சபா எம்.பி.யாகவும் இருந்த அப்துல் காதர். உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
  • ப.சிதம்பரம், அப்துல் காதரின் வீட்டிற்கு சென்று அவரது மகனும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினருமான ரசூல் மைதீனிடம் துக்கம் விசாரித்தார்.

செம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே சித்தையன்கோட்டையைச் சேர்ந்தவர் அப்துல் காதர். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும், ராஜ்ய சபா எம்.பி.யாகவும் இருந்துள்ளார்.

இவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில், அப்துல் காதர் மறைவு குறித்து துக்கம் விசாரிக்க, சித்தையன்கோட்டை வருகை புரிந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அப்துல் காதரின் வீட்டிற்கு சென்று அவரது மகனும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினருமான ரசூல் மைதீனிடம் துக்கம் விசாரித்தார்.

பின்னர் அங்கு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் பேசினார். சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு அப்துல் காதர் வீட்டிலிருந்து கிளம்பினார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வருகையை ஒட்டி அந்த பகுதியில் செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News