உள்ளூர் செய்திகள்

முக்கூடல் அருகே தொழிலாளி கொலையில் மேலும் ஒருவர் கைது

Update: 2022-08-15 09:22 GMT
  • துரை முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு வீடு திரும்பிய போது 2 பேர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
  • தலைமறைவாக இருந்த சுடலை மணியை தேடி வந்த நிலையில் அவரும் இன்று கைது செய்யப்பட்டார்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் முக்கூடலை அடுத்த கீழ பாப்பாக்குடி புது கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் சுப்பையா என்ற துரை(வயது 53). கட்டிட தொழிலாளி.

கொலை

இவர் நேற்று காலை முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு வீடு திரும்பிய போது அவரை வழிமறித்த 2 பேர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.

இதுதொடர்பாக பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் கொலை செய்யப்பட்ட சுப்பையாவின் மகன் மாரிமுத்துவுக்கும், அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன்(50) என்பவரது மகள் உமா செல்விக்கும் திருமணம் நடைபெற்றதும் பின்னர் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரிய வந்தது.

இதன் காரணமாக மாரியப்பனும், அவரது மகன் முத்துக்குமார் என்ற குட்டி, சுடலைமணி ஆகியோர் சேர்ந்து சுப்பையாவை கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் வலைவீசி தேடி வந்த நிலையில் நேற்று மாரியப்பனையும், குமார் என்ற குட்டியையும் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சுடலை மணியை தேடி வந்த நிலையில் அவரும் இன்று கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News