உள்ளூர் செய்திகள்

அடுத்த மாதம் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்குகிறது

Published On 2022-08-15 08:55 GMT   |   Update On 2022-08-15 08:55 GMT
  • சேலம் மாவட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன.
  • 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 3-வது வாரத்தில் காலாண்டு தேர்வு தொடங்குகிறது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இங்கு மாணவ- மாணவிகள் ஆங்கில வழியிலும், தமிழ் வழியிலும் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 3-வது வாரத்தில் காலாண்டு தேர்வு தொடங்குகிறது.

1-ம் வகுப்பு குழந்தைகளுக்கு 4 தாள்கள் தேர்வு நடக்கிறது. 5-ம் வகுப்பு குழந்தைளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாட பரீட்சைகள் நடைபெறுகிறது. தேர்வு முடிவடைந்ததும், 4-வது வாரத்தில் இக்குழந்தைகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்படுகிறது. இந்த தேர்வு நடைபெறும் நாட் குறிப்புகள், விடுமுறை நாட்கள் குறித்த பட்டியல் ஒவ்வொரு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்கும் பணியில் சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி இயக்க அலுவலக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News